நபிகளாரை அவமானப்படுத்தும் விதத்தில் கடந்த வருடம் யூடியூப் பதிவொன்றை வெளியிட்ட இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான இந்திக்க தொட்டவத்தவின் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வதற்கு வேண்டிக் கொண்டபோது இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டு சமரசப்படுத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் சொல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் யூடியூபில் பதிவிட்டுருந்தமையும் அதனைக் கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.