எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Date:

யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட  செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காக  சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

 

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...