ஒரு முழுமையான இராணுவத்திற்கு முன்னால் தன்னந்தனியாக கமால் அத்வான் மருத்துவமனையின் பணிப்பாளரின் இறுதிநேரம்!

Date:

காசாவின் வடக்குப் பகுதியில் எஞ்சியிருந்த ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துமனை தற்போது முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் பலர் கொல்லப்பட்டு இன்னும் பலர் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதளவுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இறுதி நேரம் வரை இம்மருத்துவமனையில் கடமையாற்றிய வைத்தியர் ஹோசம் அபு சஃபியா அவர்களுடைய இறுதி நேர தருவாயாக இருக்கின்ற ஒரு படமே இது.

இந்த இறுதிப்புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் முஹன்னத் அல் முகைத் அவர்கள் எடுத்தார்.

இம்மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்து நிர்மூலமாக்கியிருக்கின்ற நிலையில் அவரை விசாரணைக்கு அழைத்தது.

இதன்போது  51 வயதான அபு சஃபியா கைது செய்யப்பட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, மேலும் விசாரணையைத் தொடர்ந்து அவருடனான தொடர்பை இழந்ததை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது.

அப்போது அவர் அணிந்திருந்த மருத்துவ ஆடையை மாத்திரமே அணிகலனாகக் கொண்டு துணிச்சலோடு தன்னந்தனியாக இஸ்ரேலின் பீரங்கிக்கு முன்னால் அவர் செல்கின்ற கடைசி கட்ட காட்சியை அல்ஜஸீரா படமாக்கியுள்ளது.

இந்த இறுதிப்புகைப்படத்தை புகைப்படக்கலைஞர் முஹன்னத் அல் முகைத் அவர்கள் எடுத்தார்.

உலகத்தையே உலுக்கியுள்ள இந்தக்காட்சி இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு மற்றுமோர் சாட்சி.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...