காசாவில் உயிரிழந்த 35,000 மக்களின் பெயர்கள் அடங்கிய 150 மீட்டர் பேனர் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டது

Date:

காசா பகுதியில் 35,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், அவர்களின் பெயர்களைக் கொண்ட  150 மீட்டர் நீளமான பேனர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலின் நோக்கம், காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலையை உலகளவில் வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.

இதற்காக சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, பலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.,

சில இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டதால் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு, பலஸ்தீனிய மக்களின் துயரமான நிலைமைக்கு உலக மக்கள்  மத்தியில் பரவலான ஆதரவை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...