கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு!

Date:

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் (பொது நிறுவனங்கள் பற்றி குழு) தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம். முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை” என தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த...