சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக திருமதி ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
வரக்காபொல பாபுல் ஹஸன் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக கடமையை தொடங்கிய இவர் தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
போராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் விசேட பட்டமும் முதுமாணி பட்டமும் பெற்ற இவர் இலங்கையில் கல்வியியல் முதுமாணி ((MEd) பட்டத்தையும், அவுஸ்திரேலியாவில் (MSc) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
பிரதி கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) தரம் 1 தரத்தைப் பெற்று சப்ரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நேர்முகத்தேர்வு மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் இந்தப் பதவிக்கு வந்த முதலாமவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நாளைய தினம் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.