ஜெர்மனி கிறிஸ்மஸ் சந்தையில் கார் தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆனது: மக்கள் மீது மோதிய சவூதி மருத்துவர் யார்?

Date:

ஜெர்மனி நாட்டில் கிறிஸ்மஸ் மார்கெட்டில் மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் ஆபத்தான நிலையிலும், 86 பேர் பலத்த காயங்களுடனும், 78 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிறிஸ்மஸ் சந்தை கூட்டத்துக்குள் காரை தாறுமாறாக ஓட்டிய நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மருத்துவர் தலேப் (50) என தெரியவந்துள்ளது. அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் சுமார் 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கிறார்.

மருத்துவரான இவர், பெர்ன்பர்க் என்ற இடத்தில் மருத்துவராக இருந்து வருவதாகவும், மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சை செய்து வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலேப் கடந்த 2006ம் ஆண்டு சவூதி அரேபியால் இருந்து ஜெர்மனிக்கு வந்து வசிக்கத் தொடங்கினார். 2016ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஜெர்மனி நாட்டின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாக ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தமரா சீசாங் தெரிவித்துள்ளார்.

தலேப் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக BMW காரை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும், இந்த செயலை அவர் மட்டும் தனியாக செய்ததாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கான முழு காரணம் குறித்து தலேப்பிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், இச்சம்பவம் குறித்து சவூதி அதிகாரிகள் கூறுகையில், “காரை ஓட்டிய சவூதி மருத்துவர் தனது எக்ஸ் தளத்தில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவிரவாத கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஜெர்மனி அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்றனர்.

ஜெர்மனி ஊடகம் ஒன்று, தாக்குதல் நடத்திய சவூதி மருத்துவர் தலேப்பிடம் கடந்த 2019-ம் ஆண்டு பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர் தன்னை, முஸ்லிம் பின்னணியை கொண்டவர் என்றாலும், இஸ்லாம் கொள்கைகள் மீது நம்பிக்கையற்றவர் என தெரிவித்துள்ளார். இவர் ஜெர்மனியில் உள்ள ஏ.எப்.டி கட்சியின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கடினமான நேரத்தில் ஜெர்மனி மக்களுடன் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...