தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...