நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து ஹிருணிக்கா விடுதலை!

Date:

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை மீளப் பெறுவதாகவும், இனிமேல் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...