பாபர் மசூதி இடிப்பு தினம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

Date:

இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி  தலைவர் தமிமுன் அன்சாரி எக்ஸ் தளத்தில் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் பாபர் மசூதியை இடித்ததை விட கொடூரமானது அதன் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மசூதியை முதலில் கடப்பாறை இடித்தது, பிறகு நீதியை சந்திரசூட்டின் பேனா கிழித்தது. இடித்ததில் இந்தியா அவமானப்பட்டது. கிழித்ததில் ஜனநாயகம் படுகாயப்பட்டது’ என்று அவர் பதிவிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் நாடு முழுவதும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பல முஸ்லிம் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது, இதன் விளைவாக சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அயோத்தி உள்பட நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...