புதிய பாராளுமன்றத்தில் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகருக்கு எதிராக..!

Date:

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார், இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை (13) கையெழுத்திட்டனர்.

அதற்கமைய  நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தற்போதைய சபாநாயகர் அசோக ரன்வல கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதும் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்ட போதும் தன்னை கலாநிதி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஆனால் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.எஸ்.சி. பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களிடம் இருந்து ஆட்சேபனை எழுந்த சந்தர்ப்பத்திலும், இது தொடர்பான தகவல் கேட்ட போது மௌனம் காத்து, உண்மையை மறைத்துள்ள காரணங்களினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை 3ஆவது பகுதியில் பிரிவு 6இன் பிரகாரமும், அந்த நடத்தைக் கோவையின் 5ஆவது பிரிவின் நெறிமுறைகளின் பிரகாரம் உள்ள நடத்தை விதிகளின்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...