புத்தளம் தொகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் வெள்ளப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் முகமாக வடிகால் அமைப்பு வேலை திட்டங்களை புத்தளம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முன்னெடுத்தனர்.
அதற்கமைய நிலையான தீர்வை எதிர்பார்த்து மேற்குறித்த ஆவணம் பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல், கயான் ஜனக, சட்டத்தரணி ஹிருனி விஜெசிங்க ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர பொறுப்பாளர் சகோதரர் ரியாஸ் அவர்களின் தலைமையில் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது.
துறை சார் நிபுணர்களான பொறியியலாளர்களான ரிபாய், நன்ஸீர், முன்னாள் நகர சபை உறுப்பினர் சகோதரர் றஸ்மி ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல்கள், வழிகாட்டால்களைக் கொண்டு வெள்ளத்தால் பாதிப்படையும் புத்தளத்துக்கான வெள்ளத்தவிர்ப்பு தீர்வுகளும் மழை நீர் வடிகான் திட்ட முன்மொழிவுகளும் வரையப்பட்டது.
இதன்போது அமைச்சரினால் இதற்கான நிதி ஒதுக்கீட்டினை மிக விரைவாக செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதோடு இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.