பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி

Date:

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
அவர் இதனைத் தெரிவித்தார்.

“வாகன இறக்குமதியால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம், வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும்”

கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.

இதனிடையே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், சுற்றுலா வகை வாகனங்களுக்கான டொயோட்டா லங்கா வாகனங்களின் முதல் தொகுதி  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நான்கு மாத காலப்பகுதிக்குள் பேருந்துகள் மற்றும் வேன்கள் இலங்கைக்கு வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல வாகனங்களை இறக்குமதி செய்ய நம்புவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக  இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...