மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுதாபம் தெரிவித்து X பதிவொன்றை விடுத்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் அவருக்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் எண்ணற்ற சகோதர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, எனது சார்பாகவும் இலங்கை மக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரான கலாநிதி மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவில் மாத்திரமல்லாமல். 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற மாற்றுக் கொள்கைகளில் சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கலாநிதி  மன்மோகன் சிங், நீண்டகால கூட்டுறவுகளை நிறுவுவதற்கு ஆதரவளித்ததோடு, பிரிக்ஸ் போன்ற அமைப்புகளுக்கும் அவர் தனது பங்களிப்பை வழங்கினார்.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் வெளிப்படுகிறது.

அவரது பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரச சேவையில் அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமையும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...