மிரிஹானை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மியன்மார் அகதிகள்..!

Date:

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு இன்று திங்கட்கிழமை (23) மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன்  அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் பின்னர் அன்றைய தினம் மாலை குறித்த பயணிகள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த அகதிகளை மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பதற்காக  சனிக்கிழமை (21) அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததன் காரணமாக அவர்கள் மீள திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Popular

More like this
Related

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...