கத்தார் தேசிய தினம்: இலங்கைக்கான தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரமாண்ட நிகழ்வு.

Date:

கத்தார் நாட்டின் தேசிய தினம் நேற்று (11) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கைக்கான கத்தார் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் அல் சொரூர் தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில்  சிறப்பாக இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயர் றிஸ்வி சாலி, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்,  பாராளுன்றத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள்,  அரசியல் பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள்,  உலமாக்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதம அதிதி மற்றும் தூதுவர் உள்ளிட்டவர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக கேக் வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...