பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Date:

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை பொறுப்பேற்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விசேட கருமபீடம், வார நாட்களில் மாலை 6 மணி வரையிலும் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 12 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உரிய தினத்திற்கு முன்னதாக செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...