மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.
முக்கிய விருந்தினராக திருகோணமலை மாவட்ட “முஸ்லிம் எயிட்” ஒருங்கிணைப்பாளர் தாஸ்மின் சலீம் அவர்களும் வளவாளர்களாக அஷ்ஷெய்க் .ஜுனைத் நளீமி அவர்களும் அஷ்ஷெய்க் சில்மி நூரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சுமார் 11 மத்ரஸாக்களிலிருக்கு 33 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் இந்த அரபு எழுத்தணி சங்கத்தின் தலைவராக இருந்து இதனை வழி நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.