ஆப்கானிஸ்தான் அமைச்சர் தற்கொலை குண்டுவெடிப்பில் பலி: இறுதிச் சடங்குக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்கானி கொல்லப்பட்டார்.

விருந்தினராக மாறுவேடமிட்டு அமைச்சுக் கட்டிடத்திற்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி, அமைச்சர் கடிதமொன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்த போது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இவர் உள்துறை பொறுப்பு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.

தலிபான் பதவி ஏற்ற பிறகு அமைச்சரவையில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும்.

இதுவரையில் குறித்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய கலீல் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகுஇ அங்கு உயர்மட்ட அளவில் கொலைகள் நடப்பது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...