இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA) தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ் தயா லங்காபுர, வி.தனபாலசிங்கம், ஜே.ஷீலா விக்கிரமரத்ன, பி.பி.இளங்கசிங்க, உபாலி அறம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.செல்வசேகரன், எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்ரீலங்கா பௌண்டேஷன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.