இஸ்ரேலின் குண்டுகள் மட்டுமல்ல, குளிரும் கொன்று குவிக்கிறது: குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்!

Date:

காசாவில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் குளிரால் நடுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காசா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது.

இஸ்ரேலின் ராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தகர்க்கப்பட்டதுடன் 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மேலும், இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் இடமாற்றப்பட்டு காசா கூடார நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காசாவில் குளிர்காலம் துவங்கியுள்ளதால் முகாம்களில் தங்கியுள்ள இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான குடியிருப்புகளும், சரியான போர்வைகளும் இன்றி குளிரலைகளினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

காசாவில் கடந்த 2 நாட்களுக்குள் 3 குழந்தைகள் குளிரில் நடுங்கி உயிரிழந்துள்ளன. காசாவின் கான் யூனுஸ் நகரின் முவாஸி பகுதியிலுள்ள முகாமின் கூடாரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்த 3 வாரக் குழந்தையான சிலா தான் அந்த 3 குழந்தைகளில் கடைசியாக குளிரினால் உயிரிழந்தது.

இரவு முழுவதும் குளிரினால் அழுதுக்கொண்டே இருந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் போர்வைகளைப் போர்த்தியுள்ளனர்.

காலை எழுந்து பார்த்தப்போது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. உடனடியாக, அதன் பெற்றோர் அந்த குழந்தையை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கான் யூனுஸ் பகுதியிலுள்ள நாஸர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் அஹமது அல்-ஃபர்ரா கூறுகையில், கடந்த 48 மணிநேரத்தில் குளிரினால் பாதிக்கப்பட்டு சிலா உள்பட, 3 நாள்களே ஆன குழந்தை ஒன்றும், 1 மாதக் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் குளிரினால் ஏற்படும் ஹைப்போதெர்மீயாவினால் பாதிப்பின் காரணமாக உயிரிளந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...