இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே ‘அல் குத்ஸ் டுடே’ என்ற சேனலுக்கு சொந்தமான ஒளிபரப்பு வேன் மீது நடத்திய இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர்.
🔴 اللحظات الأولى بعد استهداف طائرات الاحتلال بشكل مباشر مركبة صحافة تابعة لقناة القدس اليوم أمام بوابة مستشفى العودة وسط قطاع غزة، أسفرت عن استشهاد 5 صحفيين. pic.twitter.com/YJQ3sw7U2T
— ساحات – عاجل 🇵🇸 (@Sa7atPl) December 26, 2024
போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போதே, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.