இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி!

Date:

இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (26) அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே ‘அல் குத்ஸ் டுடே’ என்ற சேனலுக்கு சொந்தமான ஒளிபரப்பு வேன் மீது நடத்திய இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்களும்  கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை காசாவின் நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை அருகே மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போதே, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு பிறகு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...