இஸ்லாமிய அறிவுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்.ரிஸ்மி ஜுனைதுக்கு ரியாதில் பாராட்டு விழா!

Date:

இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுகல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷைக் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி முதுமாணி கலாநிதி பட்டங்களை மிக சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ரியாதிலுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவருக்கான பாராட்டும் கௌரவமும் ரியாத் நகரிலுள்ள அல்மாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கபூரியா அரபுக்கல்லூரியில் அதிபராக இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த மறைந்த அஷ்ஷெயக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களின் மருமகனான ரிஸ்மி அவர்களுக்கான இப்பாராட்டு விழாவில் காலி இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் அல் இஸ்ஹான் நலன்புரி அமைப்பின் தலைவருமான அஷ்ஷைக் பத்ஹுர்ரஹ்மான் பஹ்ஜி அவர்கள் உட்பட இலங்கையிலுள்ள பல்வேறு சமூக நல அமைப்பின் பிரமுகர்கள் உலமாக்களும் கலந்துகொணடு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.

காலியிலுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அரபு மற்றும் ஷரியா மாணவர்களை உருவாக்குவதோடு குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்களையும் உருவாக்கி வருகிறது.

இக்கல்லூரியின் மாணவர்கள் இஸ்லாமிய உயர்கல்விதுறையில் பல அரபுநாடுகளில் உயர் பல்கைலக்கழகங்களில் கற்று முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ள கல்விமான்களை உருவாக்குவதில் பங்களிப்புகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த கௌரவிப்பு நிகழ்ச்சியில்  இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷைக் தீனுல் ஹசன் பஹ்ஜி அவர்களும்    இலங்கை அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் ஷைஹுத்தீன் மதனி இலங்கை தகாதுப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் இஸ்ஹாக் அப்பாஸி ரியாத் மாநகரில் தஃவா மற்றும் அழைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அஷ்ஷைக் மப்ஹூம் பஹ்ஜி அஷ்ஷைக் ளபருள்ளாஹ் பஹ்ஜி அஷ்ஷைக் ரிப்லான் பஹ்ஜி உட்பட இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...