இ-சிகரெட் விற்பனையை தடை செய்யும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு பெல்ஜியம்..!

Date:

புகையிலை எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் ஜனவரி 1 முதல் இ-சிகரெட் எனப்படும் மின் சுருட்டை தடை செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

புகையிலை பயன்பாட்டால் உலகளவில் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பெல்ஜியத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய இ-சிகரெட்டால் ஏராளமான இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டிற்கு அடிமையாகுவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

15-24 வயதுடையவர்களிடையே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த இ-சிகரெட்டுகள் பிரபலமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

இதையடுத்து பெல்ஜியம் அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இ-சிகரெட் விற்பனைக்கு முடிவு கட்டும் நோக்கில் தடையை பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அரசுகள் இ-சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகின்றன. அதேநேரம் ஐரோப்பிய யூனியனின் அங்கம் இல்லாத பிரிட்டனும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல்
இ-சிகரெட் விற்பனைக்கு தடையை அமல்படுத்த உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 2040 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத தலைமுறையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாரம்பரிய புகையிலை பொருட்களை புகைப்பதை விட இ-சிகரெட் குறைவான தீங்கு விளைவிக்கும் என்று சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது.

மேலும் வண்ணமயமான பேக்கேஜிங், விரல்களில் மோசமான புகை நாற்றத்தைத் தவிர்ப்பதன் நன்மை, ஆப்பிள், தர்பூசணி   உள்ளிட்ட மயக்கம் தரும் சுவைகளுக்காக இளைஞர்களிடையே பெருமளவில் பிரபலமாக உள்ளது.

ஆனால் இ-சிகரெட்டுகளில் இன்னும் நிகோடின் இருப்பதால், இது அதிக போதைப்பொருளாக உள்ளதாக  விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

 

Popular

More like this
Related

Crown Green and the Future of Multi-Player Features: Fast Facts

Crown Green and the Future of Multi-Player Features: Fast...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

Why Crown Green Leads in Casino Trends

Why Crown Green Leads in Casino Trends The casino industry...

2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2026ஆம் ஆண்டுக்கான  நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...