பரீட்சை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இன்று முதல் பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணைப்படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும்.
பரீட்சை இடம்பெறாத தினங்களுக்கு டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய அட்டவணை அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வழங்கப்படும்.
இன்று காலை இரசாயனவியல் பகுதி ஒன்று, தொழில்நுட்பவியல் பகுதி ஒன்று, நடனம் மற்றும் நாடகம் (மும்மொழிகளிலும்) பகுதி ஒன்று ஆகிய பரீட்சைகளும் மதியம் அரசறிவியல் பகுதி ஒன்றும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, தொடர்ந்தும் வீதிகள் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.