ஊடக அமைச்சின் ஊடகச் செயலாளரினால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தி ஊடகவியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி செய்தி ஒழுங்குகளைப் பேணாமல் தயாரிக்கப்பட்டிருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் கூற்று யாரால் சொல்லப்பட்டது என்றோ, எங்கே எப்போது நடந்த நிகழ்வு என்றோ சொல்லப்படாமல் மொட்டையாக இருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செய்தி என்பது 6 ஏனாக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது செய்தியாளர்களின் பால பாடமாகும்.
என்ன? நடந்தது?
எவர் (யார்?) செய்தது?
எங்கே? நடந்தது?
எப்பொழுது? நடந்தது?
ஏன்? நடந்தது?
எப்படி? நடந்தது?