ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனக் குடியரசு ஆகிய ஐந்து நாடுகளும் பெற்றுள்ள வீட்டோ அதிகாரம், இந்த நாடுகள் ஆதரவற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான தமது தீய நிகழ்ச்சி நிரல்களைச் செயல்படுத்துவதற்கான ஒரு கருவியாக ஐக்கிய நாடுகள் சபையை திருப்பி விடும் நிலையை உருவாக்கி உள்ளது.
உதாரணமாக காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் தடுக்க அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
காசா,மேற்குக் கரை மற்றும் தெற்கு லெபனானில் அதன் காட்டு மிராண்டித்தனத்தையும் அழிவையும் தொடர இஸ்ரேலுக்கு இதன் மூலம் உரிமம் வழங்கப்பட்டது.
சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் பாதுகாப்பு சபைக்கு முதன்மை பொறுப்பு உள்ளது. இது மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளும் சபையின் முடிவுகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
சமாதானத்துக்கு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்ற போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தீர்மானிப்பதில் பாதுகாப்பு சபை முன்னிலை வகிக்கின்றது.
இது ஒரு சர்ச்சையில் உள்ள தரப்பினரை தொடர்பு கொண்டு அமைதியான வழிமுறைகளால் அந்த சர்ச்சையை தீர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகும். மற்றும் சீர்செய்தல் முறைகள் அல்லது தீர்வு விதிமுறைகளை பரிந்துரைப்பதாகும்.
சில சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு சபை பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் அல்லது சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அல்லது மீட்டெடுக்க பலத்தை பியோகிக்கவும் அங்கீகாரம் அளிக்கலாம்.
எவ்வாறாயினும், பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காசாவின் அழிவு விடயத்தில், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டிய அமெரிக்கா துரதிஷ்டவசமாக இஸரேலின் பங்காளியாக மாறியுள்ளது.
மேலும் காசாவில் நடந்து வரும் படுகொலைகள் மற்றும் அழிவை நிறுத்துவதற்கான எல்லா பாதுகாப்பு சபை தீர்மானங்களையும் அது தடுத்துள்ளது. தொடர்ந்து தடுத்தும் வருகின்றது.
துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பெரிய மாற்றத்தை வலியுறுத்தினார்.
உலகளவில் மீதமுள்ள 194 நாடுகளின் தலைவிதியை பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களிடம் விட்டுவிட முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஐந்து நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பினர் அமைப்பை எர்டோகன் நீண்ட காலமாக கண்டித்துள்ள்ளார்.
இந்த முறைமையின் கீழ் அந்த நாடுகள் முக்கியமான முடிவுகளைத் தனியாக வீட்டோ மூலம் ரத்துச் செய்ய முடியும். ” உலகம் ஐந்தை விட பெரியது” என்று அவர் கூறினார்.
இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கையில் தென்னாபிரிக்காவின் முன்னாள் சர்வதேச உறவுகள் ஒத்துழைப்பு அமைச்சர் டொக்டர் நலேடி பாண்டோர் சமீபத்தில் லீகெஸ்டரை தளமாகக் கொண்ட அல்-அக்சாவின் நண்பர்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசும் போது “ஐ. நா.குறிப்பாக பாதுகாப்பு கவுன்சில் அதன் ஜனநாயக விரோத வீட்டோ அதிகாரத்தை கைவிடும் வகையில் ஐந்து ‘நிரந்தர’ உறுப்பினர்கள் என்ற முறையில் இருந்து சீர்திருத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
சீர்திருத்தம் பற்றிய விவாதம் ஐரோப்பாவைப் பற்றியது அல்ல என்றும், ஐரோப்பாவிற்கு அதிக அதிகாரம் பற்றியதே அது என்றும் அவர் கூறினார். ஐ. நா. உண்மையான உலக பிரதிநிதியாக இருக்க உலகளாவிய தெற்கை உலகளாவிய வடக்குடன் இணைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கொண்டார்.
பலஸ்தீன மக்களுக்கு சுதந்திரமும் நீதியும் இருப்பதை உறுதி செய்வதற்கான உலகளாவிய பிரசாரத்திற்கு நாம் அனைவரும் உறுதியளிக்க வேண்டும் என்று டொக்டர் பாண்டோர் வலியுறுத்தினார்.
உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் எல்லோரும் இனவெறி கொண்ட இஸ்ரேலை ஆதரிக்கும் அனைத்து கல்வியாளர்களையும் மற்றும் கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும்.
நிறவெறியைத் தக்கவைக்கும் சட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கும் மற்றும் நிறவெறியைக் கண்டிக்காத இஸ்ரேல், உலகில் எங்கும் அதன் விளையாட்டை விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“தீங்கு விளைவிக்கும் சக்திகள்” விளையாடுகின்றன என்று டாக்டர் பாண்டோர் கூறினார். “இஸ்ரேலுக்கு ஏன் எந்த விதமான தண்டனைகளும் இல்லை? ஹோலோகோஸ்டை நடத்தியவர்கள் பலஸ்தீன மக்கள் அல்ல.
ஆனால் அதற்கான விலையை அவர்கள் தான் செலுத்துகிறார்கள். பலஸ்தீன மக்களின் நியாயங்கள் மற்றும் நீதி குறித்து பொது மக்களுக்கு கல்வி கற்பிக்க, உண்மைகளை பொது களத்தில் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். ”தொடர்ந்து இதை செய்யுங்கள்; எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டாம். எழுதுவதையும் நிறுத்த வேண்டாம்” என்று அவர் கூறினார்.
இனப் படுகொலைக்குப் பிந்திய காசா பிரச்சினை பற்றி உரையாற்றிய அவர் பலஸ்தீனர்கள் மட்டுமே தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று பிடிவாதமாக்க் கூறினார்.
“பலஸ்தீன அரசாங்கம் ஹமாஸை விலக்க வேண்டும் என்று யாரும் சொல்லக் கூடாது” என்று அவர் கூறினார். “தேர்வு பலஸ்தீன மக்களின் தேர்வாகவே இருக்க வேண்டும். வேறு யாரும் அதில் தலையிட கூடாது” என்றார் அவர்.
“பலஸ்தீனர்களுக்காக நாங்கள் குரல் கொடுத்தால், நாங்கள் அச்சுறுத்தப்படுவோம், ‘யூத எதிர்ப்பு’ என்று அதை அழைப்பர். அது எங்களுக்குத் தெரியும். ஆனால் அது எங்களை தடுக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது.
சுதந்திரத்திற்கான நியாயமான கட்டமைப்பைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பை நாம் விட்டு விடக் கூடாது. நாம் செயல்படத் தவறினால், சுதந்திரமும் நீதியும் சிலருக்கு மட்டுமே அனைவருக்கும் அல்ல என்ற நிலை ஏற்பட்டு விடும் ” என்று அவர் முடிவாக எடுத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 ஆம் ஆண்டில் 51 நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இது சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும், நாடுகளிடையே நட்புறவை வளர்ப்பதற்கும், சமூக முன்னேற்றம், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் மனிதாபிமானத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.
ஐ. நா. வின் ஒட்டுமொத்த 193 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலுக்கு எதிராக நிற்க தயாராக உள்ளன. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்காத பாகிஸ்தானின் தூதுவர் முனிர் அக்ரம் தனது மனநிலையை சுருக்கமாகக் கூறினார். சிஎன்என்னிடம் கருத்து தெரிவித்த அவர் “இந்த நெருக்கடியில் பாதுகாப்பு சபை முடங்கிவிட்டது மிகவும் வருந்தத்தக்கது.
குறைந்தபட்சம் இந்த சபை யுத்தத்தை உடனடியாக நிறுத்தவும், மேலும் அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் அழைப்பு விடுக்கும் என்று உலகம் எதிர்பார்க்கிறது” என்றார்.
பாதுகாப்பு சபை பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு பற்றி பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மேலும் அவை களத்தில் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் என்று அழைக்கப்படுபவை சிக்கலைத் தொடங்குவதையோ அல்லது அதை முடிவுக்குக் கொண்டுவருவதையோ அரிதாகவே தடுக்கின்றன.
ஐ. நா.வை செயற்பாடற்ற ஒரு அமைப்பாக மாற்றுவதில் அமெரிக்காவும் ஏனைய பாதுகாப்பு சபை நாடுகளும் பிரதான பங்கு வகித்துள்ளன. ஐ. நா நிறுவப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் 1948 நவம்பரில் பலஸ்தீனத்தை பிரித்து யூதர்களுக்காக அங்கு ஒரு புதிய நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.
ஆனால் அந்த யூதர்களில் பெரும்பாலானவர்கள் அந்த நிலத்தைப் பார்த்தது கூட இல்லை.
முஸ்லிம்களுக்குரிய மத்திய கிழக்கின் மையத்தில் யூதர்களுக்கான ஒரு அன்னிய அரசை உருவாக்க பலஸ்தீன நிலங்களை யூதர்களுக்கு வழங்குவது சட்டவிரோதமானது என்று கூறி கிட்டத்தட்ட முழு அமெரிக்க நிர்வாகமும் அன்று அந்த தீர்மானத்தை எதிர்த்தது.
இதற்கு 6 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற சியோனிச யூதர்களால் அவர்கள் லஞ்சம் கொடுத்து மிரட்டப்பட்டனர். அன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்கர்களும் சியோனிசத்திற்கு கீழ்ப்படிவாக சேவை செய்ய தொடங்கினர்.
இன்றும் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் உருவாக்கப்படுவதும் இல்லாமல் ஆக்கப்படுவதும் யூத சக்திகளால் தான்.
முன்னாள் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்கள் ஐ. நா. வை பயன்படுத்தி பொஸ்னியா, ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா மற்றும் லிபியா போன்ற பல முஸ்லிம் நாடுகளை அழித்தனர். அங்கு அவர்கள் மில்லியன் கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்.
இதில் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ் சீனியர் மற்றும் ஜூனியர், பில் கிளிண்டன், பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் மற்றும் இப்போது இனப்படுகொலை பைடன் என்று அழைக்கப்படும் ஜோ பைடன் ஆகியோர் அடங்குவர்.
இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், பலஸ்தீனர்களின் இனப்படுகொலை மற்றும் காசாவின் அழிவை ஆதரிப்பதாகவும் அவர்கள் எல்லோருமே மீண்டும் மீண்டும் கூறினார்.
ஐ. நா வின் சீரமைப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள்
1. பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் அற்ற இடங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் உள்ள நாடுகள் அதில் உள்வாங்கப்பட வேண்டும். முடிவுகளை எடுப்பதில் உலகளாவிய மட்டத்தில் தெற்கிற்கும் அதிக இடங்களை வழங்க வேண்டும்.
2. ஐ. நா. பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
3. களப் பணிகளுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்காக UNDS பிராந்திய அணுகுமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
4. அமைப்பு முறைமைகள் மட்டத்திலான முடிவுகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன மேம்படுத்தப்பட வேண்டும்.
5. அமைப்புகள் மட்டத்திலான மதிப்பீடுகளுக்கான திறன் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.