கஜகஸ்தானில் தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்; 42 பேர் பலி!

Date:

கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தின் அருகே அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்தனர்.

இதில் 42 பயணிகள் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.

அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யா கூட்டமைப்பின் உட்குடியரசு நாடாக உள்ள செச்சனியாவின் தலைநகர் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமான பணியாளர்கள் பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே தான் விமானம் தரையிறங்க முயன்றபோது தரையில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் விமானம் வானில் இருந்து ஒரே சீராக தரையிறங்காமல் அசைந்து அசைந்து வந்து தரையில் மோதி தீப்பிடித்ததும் பதிவாகி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் வானில் பறந்தபோது மோசமான வானிலை நிலவி உள்ளது.

அதிகப்படியான பனிமூட்டத்தால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு பிறகு தான் விமானம் அவசர தரையிறக்கத்துக்கு தயாராகி உள்ளது.

ஆனால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் விமானத்தில் வேறு ஏதாவது இன்ஜின் உள்ளிட்ட பிற இயந்திர கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...