கடவுச்சீட்டுப் பணிகளை விரைவுபடுத்த மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகள்!

Date:

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குடிவரவு திணைக்களம் 10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...