காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துவமனையும் எரியூட்டப்பட்டு குண்டு வீசி தகர்க்கப்பட்டு அதிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாதளவுக்கு கடத்திச்செல்லப்பட்டிருக்கின்ற நிலையில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனையை தளமாகக்கொண்டு இயங்குவதாலேயே இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் முகமாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்ரேல் சொல்வதைப்போல ஹமாஸ் மருத்துவமனைகளை பயன்படுத்துவது உண்மையா என்று கண்டறிவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை காசா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்குமாறு ஹமாஸ் வேண்கோள் விடுத்துள்ளது.
மருத்துவமனைகளை தளமாகக் கொண்டு ஹமாஸ் இயக்கம் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஹமாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.