எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04) தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.