சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்படானது, புதிய மக்கள் முன்னணியின் மஹரகம அமைப்பாளர் தினேஷ் அபேகோனால் இன்று (12) அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பத்தாவது நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் தேர்தலுக்கு முன்னரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் முன்வைத்த கல்வித் தகைமையின் சரியான தன்மை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதாக புதிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியே வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல நவம்பர் 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அசோக ரன்வல சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.