சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வு!

Date:

சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று (18) புதன்கிழமை கொழும்பில் உள்ள ‘கோல் பேஸ்’ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு விவகார அமைச்சகம் உட்பட பல அமைச்சுகளின் அரச அதிகாரிகள், பல நாட்டுத் தூதுவர்கள், இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது சவூதி அரேபியாவின் அரபு மொழி மீதான ஆர்வத்தையும் சவூதி  மன்னர் அப்துல் அஸீஸ் அல் சௌத் அவர்களின் காலத்திலிருந்து, தற்போதைய மன்னரான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் அவர்களின் ஆட்சி வரை, சவூதி அரேபியாவிலும் மற்றும் அதன் எல்லைகளை கடந்தும் அரபு மொழியை பரப்புவதற்கான முயற்சிகள் தொடர்பாகவும்  சவூதி அரேபியாவின் பிரதி வேலைத்திட்டப் பிரதானி, அப்துல்-இலாஹ் ஒர்கூபி  உரையாற்றினார்.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உரையாற்றுகையில்,

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமையிலான சவூதி அரேபியா அரபு மொழியை உள்ளகமாகவும் வெளிநாடுகளிலும் பரவச் செய்வதற்காக நிறுவியுள்ள மன்னர் சல்மான் சர்வதேச அரபி மொழி அகாடமியின் முயற்சிகளை பாராட்டினார்.

அதேவேளை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித் துறைத் தலைவர் கலாநிதி ராசிக் அப்துல் மஜீத் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபி மற்றும் இஸ்லாமிய துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் முஹம்மத் சலீம் ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.

அரபு மொழியின் முக்கியத்துவம், சர்வதேச தினத்தை கொண்டாடுவதன் அவசியம், மற்றும் அரபி மொழியின் நாகரிகங்களின் மறுமலர்ச்சியிலும், குறிப்பாக ஐரோப்பிய மறுமலர்ச்சியிலும் மற்றும் தொழில்துறை புரட்சியிலும், அரபுகளின் அறிவு பிற பண்பாடுகளுக்கு மாற்றியமைக்கப்பட்டதிலும் அதன் பங்களிப்பு குறித்து விளக்கினர்.

அத்துடன் கிரேக்க மற்றும் ரோமானிய அறிவியல் மற்றும் தத்துவங்களை மறுமலர்ச்சிக் காலத்தில் பரப்பியதிலும் அரபு மொழியின் பங்கு பற்றி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது, அரபு மொழியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அதன் அழகையும் குர்ஆனின் மொழியான அதனை உலகளவில் பரப்புவதில் சவூதி அரேபிய அரசின் மகத்தான முயற்சிகளை எடுத்துக்கூறும்  காணொளிகளும் காட்சிபடுத்தப்பட்டன.

அத்தோடு அரபு எழுத்தணிக் கலைஞர்களின் பங்கேற்புடன் அரபு எழுத்துக்களின் அழகை காட்டும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...