சிரியாவில் ஜனாதிபதி ஆசாத் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா வசம் வந்தது. சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த குன்று பகுதிகள் தற்போது இஸ்ரேல் வசம் வந்துள்ளது.
சிரியா ஆட்சி கவிழ்ந்ததை பயன்படுத்தி இஸ்ரேல் அந்த பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராக பல குழுக்கள் போராடி வந்தன. அந்த குழுக்களில் மிகவும் முக்கியமான மற்றும் வலிமையான குழு ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) ஆகும்.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் உருவாக்கப்பட்டது.
இப்போது அந்த குழு சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி செய்தது. இப்போது அங்கே ஆட்சியையே தூக்கி வீசி உள்ளது. அபு முகமது அல்-ஜோலானி அல் கொய்தாவின் சிரிய துணை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவை என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் இவர்கள் அங்கே முக்கியமான நகரங்களை கைப்பற்றி உள்ளனர். HTS மூத்த தளபதி லெப்டினன்ட் கர்னல் ஹசன் அப்துல்-கானி இது தொடர்பாக கூறுகையில், எங்கள் நடவடிக்கைகள் டமாஸ்கஸின் வீழ்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் செல்கிற வழியில் இருக்கும் கைதிகள், அரசு இத்தனை காலம் அடைத்து வைத்து இருந்த கைதிகளை எல்லாம் விடுதலை செய்து வருகிறோம், என்றுள்ளார்.
இப்படி சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.