சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.
அந்நாட்டின் போராளிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றுகின்ற போது பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஹமா நகரைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்துள்ளது.
இதுபோன்ற தருணங்கள், சிரியாவின் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைகளுக்கு ஒரு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.