சிவப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம்!

Date:

சிவப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற, பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு வட் வரி அறவிடப்படுவதில்லை என்றும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சர்க்கரைக்கு 18% வட் மற்றும் 2.55% வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போது ஒரு கிலோ சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...