இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்க மேற்கொண்ட முதலாவது வெளி நாட்டு விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானமானது நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
அங்கு, இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
அதன்பிறகு, இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.