ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Date:

ஜனாதிபதி நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் குழுவொன்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துமூலம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பொதுமக்களின் நிதியைப் பாதுகாப்பதற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி நிதிச் சட்டத்தில் தெளிவான அளவுகோல்கள் உள்ளதாகவும், அந்த அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டு பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதால், விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முறைப்பாட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...