ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல பத்திரிகை விளம்பரங்களில் செய்திகள் வெளியாகின. அவர் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.

எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் என எங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...