இலங்கையின் உயர் கல்வித்துறையில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களையும் இந்நாட்டுக்குத் தேவையான மனித வளங்களையும் உருவாக்குவதில் ஏனைய அரச சார் பல்கலைக்கழகங்களைப் போலவே திறந்த பல்கலைக்கழகத்துக்கும் ஒரு பாரிய பங்கு உண்டு.
முழுநேர பல்கலைக்கழக வாய்ப்பை பெறாத பலர் இத்திட்டத்தினூடாக பயன் பெற்று வருகிறார்கள். நாடெங்கிலும் உள்ள இப்பல்கலைக்கழகத்தின் கிளைகள், கற்றல் நிலையங்கள் போன்றவற்றில் இணைந்து பல்லாயிரக்கணக்கான இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயம்.
அந்தவகையில் புத்தளம் மாநகரில் மறைந்த பிரதியமைச்சர் கே.பாயிஸ் அவர்களுடைய பெருமுயற்சியின் காரணமாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்ற திறந்த பல்கலைக்கழத்தின் புத்தளம் கிளை இப்பகுதி வாழ் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.
இருந்த போதிலும் இதிலிருக்கின்ற சில வளப்பற்றாக்குறை காரணமாக இதனுடைய முழுமையான பலனை இப்பகுதிவாழ் மக்கள் பெற்றுக்கொள்வதில் பல சவால்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளதை அண்மைக் காலமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த வகையில் இப்பல்கலைக்கழக புத்தளம் வளாகம் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படவிருப்பதான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதையடுத்து இதனுடைய உண்மை நிலை என்ன, உண்மையிலேயே அவ்வாறனதொரு நிலை காணப்படுகின்றதா அல்லது இதனுடைய தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய ஒரு விசேட கலந்துரையாடல் இன்று மாலை (03/12/2024) திறந்த பல்கலைக்கழக புத்தளம் வளாகத்தில் அதன் முகாமையாளர். திரு.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது.
இப் பிரமுகர் மட்ட கலந்துரையாடலில் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், புத்தளம் பெரிய பள்ளிவாசல், கல்விசார் சிவில் சமூக அமைப்புக்களுடைய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு பல்கலைக்கழகம் தொடர்பான தெளிவை பெற்றுக் கொண்டதோடு அது சார்ந்து செய்யவேண்டிய ஆக்கப்பூர்வமான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி பல்வேறு தீர்மானங்களையும் மேற்கொண்டார்கள்.
இக்கலந்துரையாடலின் இறுதியில் திறந்த பல்கலைக்கழக புத்தளம் வளாகத்தின் முகாமையாளர் திரு.ஜிப்ரி அவர்கள் Newsnow இடம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.