துருக்கிய ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய செரண்டிப் நிறுவனம்

Date:

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற 4வது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்காட்சியி- 2024ல், துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்தூகானுக்கு செரண்டிப் அறக்கட்டளையின் சார்பாக, உலகளாவிய நிவாரண உதவிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ஆற்றிய பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாக  நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் இலங்கை உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) பங்கேற்றன.

இக் கண்காட்சி விசேடமாக பலஸ்தீனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் சர்வதேச மனிதாபிமான முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அத்துடன் மனிதாபிமான உதவி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் தற்போதைய திட்டங்கள் பற்றிய விவரங்களும் கலந்து கொண்டோருக்கு காண்பிக்கப்பட்டன.

காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹைதர்பாசா” துறைமுகத்தில் கிட்டதட்ட 130 நாட்களாக நங்கூரமிட்டுள்ள “மாவி மர்மரா” கப்பலின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் விக்டன் கப்பலின் பணி குறித்தும் அர்த்தமுள்ள உரையாடல்களும் இக் காண்காட்சியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

தகவல்:
முஹம்மத் ஸுப்யான்
(Fb)

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...