தேசிய அருங்கலைகள் பேரவைக்கு புதிய தலைவராக கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமனம்!

Date:

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

 

 

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...