பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை விருப்பம்: அநுரகுமார புட்டினுக்கு கடிதம்!

Date:

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பாக்கிர் அம்சா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்,

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. ஏனைய பிரிக்ஸ் நாடுகளையும் ஒரு கூட்டாளி நாடாக இணைவதற்கான கோரிக்கையுடன் நாங்கள் அணுகியுள்ளோம்.

மேலும், அவர்களின் நேர்மறையான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தூதுவர் பகீர் அம்சா ரஷ்ய ஊடகமான RIA நோவோஸ்டியிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி புட்டினுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே மாதத்தில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நாட்டின் விண்ணப்பத்திற்கு ஆதரவைக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் தற்போது 3.6 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பத்து நாடுகளை உள்ளடக்கியது.

இந்த நாடுகள் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...