அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னைய அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M. முர்ஷித் முன்வைத்த வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு ரூ.4,30,000 பெறுமதியிலான Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் (09) கையளிக்கப்பட்டன.
இதில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் M.H. முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் அஜ்மல், செயலாளர் பொறியியலாளர் மரைக்கார், பொருளாளர் சட்டத்தரணி பாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் ஹாபி உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.