“புத்தளம் வெள்ளத்தின் பாதிப்புக்களும் தவிர்ப்பதற்கான முன்மொழிவுகளும்’:அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் மகஜர் கையளிப்பு!

Date:

புத்தளம் தொகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் வெள்ளப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் முகமாக வடிகால் அமைப்பு வேலை திட்டங்களை புத்தளம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முன்னெடுத்தனர்.

அதற்கமைய நிலையான தீர்வை எதிர்பார்த்து மேற்குறித்த ஆவணம் பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல், கயான் ஜனக, சட்டத்தரணி ஹிருனி விஜெசிங்க ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர பொறுப்பாளர் சகோதரர் ரியாஸ் அவர்களின் தலைமையில் இன்று (13)  வழங்கி வைக்கப்பட்டது.

துறை சார் நிபுணர்களான பொறியியலாளர்களான ரிபாய்,  நன்ஸீர், முன்னாள் நகர சபை உறுப்பினர் சகோதரர் றஸ்மி ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல்கள், வழிகாட்டால்களைக் கொண்டு வெள்ளத்தால் பாதிப்படையும் புத்தளத்துக்கான வெள்ளத்தவிர்ப்பு தீர்வுகளும் மழை நீர் வடிகான் திட்ட முன்மொழிவுகளும் வரையப்பட்டது.

இதன்போது அமைச்சரினால் இதற்கான நிதி ஒதுக்கீட்டினை மிக விரைவாக செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதோடு இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...