பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனதுங்க கந்தளாய் பிரிவில் இருந்து இப்பதவிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.யு.கே. லொக்குஹெட்டி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணை பிரிவிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.கே.எஸ். பெரேரா பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார, புத்தளம் பிரிவில் இருந்து வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.