போதுமான சட்டங்கள் இருந்தும் முறையாக நடைமுறைப்படுத்தாமையால்தான் பிரச்சினைகள் உருவாகுகின்றன: சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி

Date:

மொழி உரிமைகள் தொடர்பான ‘அரசியலமைப்பு விதிகள்’ எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு நவம்பர் 30 ஆம் திகதி புத்தளம் இசுறு வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பும் தேசிய சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இச்செயலமர்வில் களனி பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி கலந்துகொண்டு விரிவுரை செய்யும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் முக்கியஸ்தர்களான மதிப்புக்குரிய புத்தியாகம ரதனதேரர், இந்து மத குருக்கள் சவிதர சர்மா குருக்கள், அருட்தந்தை திலந்த பெரேரா, அஷ்ஷேய்க் அப்துல் முஜீப் ஆகியோர் உட்பட நான்கு மதங்களையும் சேர்ந்த இன்னும் பல மதத் தலைவர்களும் மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தனது விரிவுரையின் போது,

மொழி ஒரு பிரதான பிரச்சினையாக இருக்கிறது. மொழி ரீதியிலான பிரச்சினைகளை இல்லாமல் செய்து அனைத்து இன மக்களும் சமத்துவமாக வாழக் கூடிய வகையில் அரசியல் யாப்பில் போதியளவு வழிகாட்டல்களும் சட்டங்களும் இருந்த போதிலும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களும் அதிகார பீடத்திலுள்ளவர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த அலட்சியப்போக்கும் சுயநலவாதமும் தான் இந்நாடு இந்தளவு தூரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

மேலும் மொழி சார்ந்த விடயத்திலும் அவரவர்களுக்கு உள்ள உரிமைகளை தெரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்துவதன் ஊடாக எவ்வாறு நாம் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப முடியும் என்பதனையும் அனுபவ ரீதியிலான உதாரணங்களோடு அவர் விளக்கினார்.

இது தொடர்பான செயலமர்வும் கேள்வி பதிலும் நிகழ்ச்சியின் இடையே நடாத்தப்பட்டு இவ்விடயம் தொடர்பில் சிறப்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இச்செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி நிரோஷா அந்தணி கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

மாவட்ட சர்வமத அமைப்பின் இணைப்பாளர் திருமதி முஸ்னியா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...