போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு ஊடாக சமாதானமிக்க பல்வகைமையுடனான இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் கொழும்பில் இருநாள் விசேட கருத்தரங்கு நேற்றும் (19) இன்றும் (20) இடம்பெற்றது.
கொழும்பு ஜானகி ஹோட்டல் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் அங்கத்தவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிவில் அமைப்புக்கள், தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
இதன்போது வடக்கு கிழக்கு தெற்கு, யாழ், பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் ‘நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு’ தடையாக இருப்பவற்றிற்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு தொடர்பான படங்கள் பின்வருமாறு…