நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகளில் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன கூறியுள்ளார்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 23ஆம் திகதி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.